Brutal Murder of 8 Year Old Girl: மகளின் மீது கணவர் வைத்த பாசத்தால் தாய் வெறிச்செயல்: 8 வயது சிறுமி கொடூர கொலை.. ஈரக்கொலையை நடுநடுங்கவைக்கும் துயரம்.!

முதல் மனைவி இறந்துபோன பின் இரண்டாவது திருமணம் செய்த கணவருக்கும் - மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்த்தும், முதல் தாரத்தின் மீது தந்தையாக பாசம் வைத்த நபரின் செயல் இரண்டாம் தாரத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி கொலை செய்ய வைத்துள்ள பதைபதைப்பு சம்பவம் நெஞ்சை பதறவைத்துள்ளது.

Uttarakhand Girl Soni Murder Case 21-Apl-2024 (Photo Credit: @SachinGuptaUP X)

ஏப்ரல் 21, உத்தம் சிங் நகர் (Uttarakhand News): தன்னைப்போல ஒரு பெண்ணனாக, பெண் குழந்தையாக கருதவேண்டிய பச்சிளம் பிஞ்சை, பெண் வன்மத்துடன் கையாண்டு இறுதியில் அது (Uttarakhand Stepmother Kills Stepdaughter) கொலையில் முடித்துள்ள துயர சம்பவத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. உலகமே ஸ்ரீராமர் அவதரித்த நாளை சிறப்பித்துக்கொண்டு இருந்தபோது, தனிமனித ஒழுக்கம் மற்றும் அன்புக்கு எதிராக செயல்பட்டு, பிஞ்சுக் குழந்தையை ஈவுஇரக்கமின்றி ஈரக்குலை நடுங்க வைக்கும் வகையில் கொலை செய்த பெண்ணின் அதிர்ச்சி செயல் பதறவைத்துள்ளது.

முதல் மனைவி உயிரிழப்பு: உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள காஷிபூர், கடக்பூர் தேவிபுரா பகுதியை சேர்ந்தவர் மோனு. இவரின் முதல் மனைவி ரீனா தேவி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தம்பதிகளுக்கு சோனி என்ற 8 வயது மகள், தணு என்ற 6 வயது மகள் என 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். ரீனாதேவியின் மறைவுக்கு பின்னர் தணு தனது அத்தையுடன் வசித்து வருகிறார். மோனு தனது மகள் சோனியுடன் வசித்து வந்துள்ளனர்.

இரண்டாவது திருமணம் செய்தாலும், முதல் (Stepmother Posessivness Killed 8 Aged Minor Girl) தாரத்தின் மகள் மீது பாசம்: இதனிடையே, ஓராண்டு கழித்து மோனு மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி, பசல்பூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகள் திருமணத்திற்கு பின் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், இவர்களின் அன்புக்கு ஆடையாளமாக மகன், மகள் பிறந்தனர். எனினும், தனது முதல் மனைவியின் குழந்தையான சோனுவின் மீது மோனு அதிக அன்பு வைத்து, அதனை வெளிப்படையாக காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது. Van Truck Collision: திருமண வீட்டிற்கு சென்று வரும்போது சோகம்; வேன் - கனரக லாரி மோதி 9 பேர் பரிதாப பலி.! 

Marriage (Photo Credit: Pixabay)

சித்தியின் கொடுமையால் பரிதவித்த சிறுமி: இது லட்சுமி தேவிக்கு சோனுவின் மீதான பார்வையை மாற்றி ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சோனுவை லட்சுமி தேவி அடிக்கடி தாக்கி வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஏப்ரல் 17 அன்று ராமநவமி பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்று சோனுவின் கை-கால்களை கட்டிப்போட்டு, சுடுதண்ணி ஊற்றி கொலை செய்த கொடும்பாவியான லட்சுமி தேவி, கழுத்தை நெரித்தும் சிறுமியின் மரணத்தை உறுதி செய்துள்ளார். பின் குழந்தையின் சடலத்தை சாக்கில் கட்டி, எதிர்வீட்டில் உள்ள காலி இடத்தில் புதைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார்.

விசாரணையில் அதிர்ச்சி தகவல்: குழந்தையை காணவில்லை என தனது கணவருக்கும் தாமதமாக தகவல் தெரிவித்தவர், உறவினர்களை ஏமாற்றி கபடநாடகம் ஆடி இருக்கிறார். பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் லட்சுமி தேவியின் மீது சந்தேகம் திரும்பியுள்ளது. அவர் தனது வீட்டின் வெளியே பையுடன் எதிர்வீட்டிற்கு சென்றதும், பின் அங்கிருந்து பை இன்றி வந்ததும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. Dog Cute Moment: கமாண்டரின் அனுமதியுடன் துள்ளிக்குதித்து பணிக்கு திரும்பிய நாய்; வியக்கவைக்கும் வீடியோ வைரல்.! 

கொலைக்கான காரணமாக சுயநலம்: இதனையடுத்து, லட்சுமி தேவியிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மேற்கூறிய அதிர்ச்சி தகவல் அம்பலமானது. மேலும், சோனியின் மீது அவரின் தந்தை மோனு மற்றும் அவரின் குடும்பத்தினர் பாசத்துடன் இருந்து வந்ததே லட்சுமி தேவி சோனியை கொலை செய்வதற்கான காரணமாக அமைந்துள்ளது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து லட்சுமி தேவியை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement