ஏப்ரல் 21, ஜல்வார் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜல்வார் (Jhalawar Accident 9 Died) மாவட்டத்தை சேர்ந்த நபர்கள், வேனில் போபாலில் உள்ள துங்கிரி கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர். பின் இவர்கள் தங்களின் சொந்த ஊர் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்கள் பயணித்த வேன், இன்று அதிகாலை 02:45 மணியளவில், ஜல்வார் மாவட்டம் அக்லேரா, பஞ்சொலா பகுதியில் வந்துகொண்டு இருந்தது. Dog Cute Moment: கமாண்டரின் அனுமதியுடன் துள்ளிக்குதித்து பணிக்கு திரும்பிய நாய்; வியக்கவைக்கும் வீடியோ வைரல்.! 

லாரி - வேன் மோதி துள்ளத்துடிக்க நடந்த சோகம்: அச்சமயம் வேன் எதிர்பாராத விதமாக கனரக லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய நபர்களில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விபத்தில் படுகாயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அடுத்தடுத்து என 7 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.