IPL Auction 2025 Live

IPL 2024 MI and Gujarat Fans Fight: மைதானத்தை கலவரப்படுத்திய ரசிகர்கள்; மும்பை - குஜராத் அணி ஐபிஎல் ஆட்டத்தில் அடிதடி.!

நடப்பு ஐபிஎல் தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் அணிகள் மைதானத்தில் மோதிக்கொள்ள, கருத்து வேறுபாடு காரணமாக ரசிகர்கள் இருக்கைகளில் இருந்தவாறு மோதிக்கொண்டனர்.

MI Vs GT Fans Fight on 24-March-2024 (Photo Credit: @TeluguScrbe X)

மார்ச் 25, அகமதாபாத் (Ahmedabad): ஐபிஎல் 2024 (IPL 2024) தொடரின் ஐந்தாவது ஆட்டம் நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் - குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் (MI Vs GT) இடையே நடைபெற்றது. தொடரில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பாக விளையாடியவர்களில் சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ரன்கள், ஹில் 22 பந்துகளில் 31 ரன்னும், ராகுல் திவேதியா 15 பந்துகளில் 22 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பந்துவீச்சை பொறுத்தமட்டில் பும்ரா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். IPL 2024 Points: புள்ளிபட்டியலில் முதலிடத்தை பெற்ற ராஜஸ்தான் அணி; அதிரடி ஆட்டத்தால் நெட் ரன் ரேட்டில் சாதனை.! 

தடுமாறிய மும்பை அணி: இதனைத் தொடர்ந்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியை தழுவியது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட் ஆகிவிட, தேவல்ட் 38 பந்துகளில் 46 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால், இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. Padikkal Helmet Hits by Boult Fire Ball: படிக்கலின் ஹெல்மட்டை பதம்பார்த்த போல்ட்டின் பந்து: ரசிகர்களை குலைநடுங்கவைத்த சம்பவம்.! போராடி வெற்றிகண்ட ராஜஸ்தான்..! 

சண்டையில் ஈடுபட்ட ரசிகர்கள்: குஜராத் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் அமர்சாய், உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருந்தனர். இறுதியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்நிலையில், மைதானத்தில் குஜராத் மற்றும் மும்பை அணி ரசிகர்கள் இடையே திடீரென வாக்குவாதம் உண்டாகி இருதரப்பும் சரமாரியாக தாக்கிக் கொண்டது. இதனால் சிறிது பரபரப்பு தொற்றிக்கொள்ள, உடனடியாக நிகழ்விடத்திலிருந்த காவலர்கள் சண்டையில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.