மார்ச் 25, ஜெய்பூர் (Sports News): ஐபிஎல் 2024 கிரிக்கெட் போட்டி (IPL 2024) கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் (CSK Vs RCB) பெங்களூர் அணி இடையேயான ஆட்டத்தில், இறுதியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் பேட்டிங் செய்த சென்னை அணி 18.4 அவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆட்டத்திற்கான முடிவுகள்: நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (DC Vs PBKS) அணிகள் மோதிக்கொண்டன. இந்த அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து, மறுமுனையில் களமிறங்கிய பஞ்சாப் அணி 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 3வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் - சன்ரைசர்ஸ் (KKR Vs SRH) ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இதில் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. Cop Died by Heart Attack: இரவு உணவு எடுத்துக்கொண்டபோது சோகம்; காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்.!
ராஜஸ்தான் (RR Vs LSG) அணி அபார வெற்றி: நேற்று நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோவா அணி களம் கண்டது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் எடுத்திருந்தது. மறுமுனையில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக நடந்த ஐந்தாவது ஆட்டத்தில், மும்பை மற்றும் குஜராத் அணிகள் (MI Vs GG) மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் 20 ஓவர்கள் முடிவில், குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, மறுமுனையில் களமிறங்கிய மும்பை அணி இருபது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.
நெட் ரன் ரேட்டில் ஆர்.ஆர் அணி முதலிடம்: கடந்த ஐந்து போட்டிகளை பொறுத்தமட்டில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால், ஐபிஎல் போட்டிகளுக்கான புள்ளிகளில் இரண்டு பாயிண்டுகளை பெற்று, நெட் ரன் ரேட்டில் (NRR) ஒரு மதிப்பெண்ணை பெற்றுள்ளது. அதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 புள்ளிகளுடன், +0.779 என்ஆர்ஆர் பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 2 புள்ளிகளுடன் +0.455 என்.ஆர்.ஆர் பெற்றுள்ளது.
#TATAIPL 2024 is well and truly underway! 🙌
How did your favourite team’s first game of the season go? 🤔
🥳 or 😢? pic.twitter.com/0cq82lGcO2
— IndianPremierLeague (@IPL) March 24, 2024