Trending Video: விஜயின் பிரச்சார பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து.. பதறவைக்கும் வீடியோ.!
கரூரில் தவெக தலைவர் விஜயின் பிரச்சார பேருந்து முன் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த காணொளி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
செப்டம்பர் 29, கரூர் (Karur News): கரூர் மாநகரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரண சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி நாடு முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தேசிய முதல் மாநில அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றிய நேரத்தில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பும் கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக நேரில் இருந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கரூர் சம்பவம் - தவெக தலைவர் விஜய் இரங்கல் அறிக்கை:
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் திருச்சி விமான நிலையம் மற்றும் சென்னையில் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது அவர் பதிலளிக்காமல் சென்றார். இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின் சென்னை வீட்டிற்கு சென்ற தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதயம் நொறுங்கி இருப்பதாக இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் அவரது வாசல் பூட்டிய நிலையில் வீட்டினுள் இருந்தவர் இன்று அவசர அவசரமாக பாதுகாப்பு படையினர் சூழ வெளியே சென்றார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல் கிடைக்கப்பெறவில்லை. TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்த தவெக தலைவர் விஜய்.!
பிரச்சார பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து:
இதனிடையே தவெக தலைவர் விஜயின் பிரச்சார பேருந்தில் மோதி இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளான ()வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த காணொளியில், விஜயின் பிரச்சாரப் பேருந்தின் முன் இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக ஆதரவாளர்கள் சிலர் பேருந்து வீடியோ எடுப்பதற்காக முயன்றுள்ளனர். அப்போது அருகாமையில் சென்று கொண்டிருந்த பைக்கின் சக்கரம் மீது இருசக்கர வாகனத்தின் சக்கரம் இடித்து கட்டுப்பாட்டை இழந்து பிரச்சார பேருந்தின் சக்கரத்தில் மோதியது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இருசக்கர வாகனம் நொறுங்கியது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிரும் பலரும் இது போன்ற சம்பவங்களுக்கு காவல்துறையினர் எப்படி பாதுகாப்பு கொடுக்க இயலும்? எனவும், தங்களின் உயிர்களைப் பற்றி அவர்களே கவலைப்படாமல் இணையத்தில் டிரெண்டாக வீடியோ எடுக்க முயற்சிப்பது மோசமான செயல் என்று தெரிவித்து வருகின்றனர்.
இருசக்கர வாகன விபத்து தொடர்பான வீடியோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)