HC On Father-Daughter Relations: "தந்தை - மகள் உறவின் புனிதத்தை கெடுத்து ஜாமின் வேண்டுமா?" - பலாத்கார குற்றவாளிக்கு அதிரடி காண்பித்த நீதிமன்றம்.!

12 வயதுடைய மகளை 2 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி சீரழித்ததை போல, நடப்பு ஆண்டிலும் முயற்சித்த தந்தை புகாருக்கு பின் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பித்த சம்பவத்தில், நீதிபதிகள் காண்பித்த அதிரடி செயலை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Indore High Court | Child Abuse File Pic (Photo Credit: @LiveLawIndia / X Pixabay)

டிசம்பர் 28, இந்தூர் (Indore): மத்திய பிரதேசம் மாநிலத்தை சார்ந்தவர் தேவராஜ் தாங்கி. இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 12 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த மகளை தேவராஜ் பாலியல் பலாத்காரம் (Father Rapes Daughter) செய்வதாக தெரிய வருகிறது. இது குறித்து வெளியே கூறக்கூடாது என்றும் அவர் மிரட்டியதால், சிறுமியும் பயந்து அதனை வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார்.

சொந்த தந்தையால் நடந்த சோகம்: இதனை தனக்கு சாதகமாக்கிய தேவராஜ், கடந்த மார்ச் 3, 2023 அன்று அதிகாலை 2.30 மணியளவில் மீண்டும் சிறுமியை வலுக்கட்டாயப்படுத்தி, அவரின் ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது அத்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். E Cigarette Caution: இ-சிகிரெட்டால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் இவ்வுளவா?.. அலட்சியமாக கூட தப்பு பண்ணிடாதீங்க.! 

Sexual Abuse | Court Judgement, Both File Pic (Photo Credit: Pixabay)

குற்றவாளி ஜாமின் வேண்டி விண்ணப்பம்: புகாரை ஏற்ற காவல்துறையினர் இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 376 (2) (n), 376 (3), 376 (1), 376 (2) (f), 506 மற்றும் 376 (AB) போக்ஸோவின் (Pocso Act) கீழ் வழக்குப்பதிந்து, கடந்த மார்ச் மாதம் தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது சிறை வாழ்க்கை அனுபவித்து வரும் தேவராஜ், தனக்கு ஜாமின் வேண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும், அந்த மனுவில் தேவராஜன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், வழக்கு விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட நபர் சிறையில் இருப்பது தேவையற்றது என்பதால், ஜாமின் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதிரடி காண்பித்த நீதிபதிகள்: இருதரப்பு விவாதங்களையும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு தனது தந்தையால் நேர்ந்த கொடுமை குறித்து விவரித்து இருக்கிறார். சிறுமி சொந்த தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டு மிரட்டப்பட்டுள்ளார். தந்தை தன்னை வாழ்நாளில் இளம் பருவத்தில் காப்பாற்றுவார் என்று நினைத்து உறங்கும் சிறுமியை, அவர் தனது செயல்பாடுகளால் தந்தை மகள் - உறவின் புனிதத்தை சீரழித்திருக்கிறார். 12 வயது சிறுமிக்கு நடந்த இந்த விஷயம் துரதிஷ்டமானது, மனிதாபிமானமற்ற, கொடூரமான, வெட்கக்கேடான செயல். மருத்துவ அறிக்கையின்படி சிறுமிக்கு உடல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகளையும் நாங்கள் அறிவோம். இதனால் குற்றவாளிக்கு ஜாமின் வழங்க இயலாது" என்று அதிரடியாக தெரிவித்தனர். தேவராஜின் ஜாமின் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement