Painter Dies Heart Attack: மாரடைப்பால் மரணமடைந்த பெயிண்டர்; சிசிடிவியில் பதிவான மரணத்தின் இறுதி நொடிகள்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!

கொரோனாவுக்கு பின்னர் மாரடைப்பு மரணங்கள் இன்று வெகுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Painter Died Heart Attack Indore (Photo Credit: @KashifKakvi X)

டிசம்பர் 29, இந்தூர் (Madhya Pradesh): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் (Indore) பகுதியைச் சார்ந்த பெயிண்டர் ஆஷிஷ் (வயது 30). சம்பவத்தன்று இவர் அங்குள்ள வீடு ஒன்றில் நடைபெற்று வந்த பெயிண்டிங் வேலையை கவனித்து வந்துள்ளார். அச்சமயம், திடீரென உடல் நலக்குறைவை எதிர் கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறிது நேரம் அவர் ஓய்வு எடுக்க வேண்டி உட்கார்ந்து இருந்த நிலையில், ஒரு நிமிடத்திற்குள் மயங்கி சரிந்து விழுந்தார்.

மாரடைப்பால் நொடியில் மரணம்: அவரைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், முதலில் மின்சாரம் தாக்கி விட்டதோ என அஞ்சி மின்சார வயர்களில் இருந்து தூரமான பகுதிக்கு இழுத்தனர். பின் ஒருவர் கைகளை தேய்த்துக்கொடுத்து முதலுதவி செய்ய முயற்சித்தார். பின் ஒரு சில நொடிகள் கழித்து அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி இருக்கலாம் என்று நினைத்தவர்கள், உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். ஆனால், அங்கு ஆஷிசின் மரணத்தை மருத்துவர்கள் உதவி செய்தனர். Father Kills: மகள் மீது புகை வீசியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; 4 பேர் கும்பலால் பெண்ணின் தந்தை சரமாரியாக குத்திக்கொலை.! 

அதிர்ச்சி காட்சிகள் வெளியானது: இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ஆசிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிந்து விசாரணையும் நடைபெற்றது. விசாரணையில், சிசிடிவி கேமிராவில் ஆஷிஷ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

நவீன யுகத்தில் இளம் தலைமுறையிடையே வயது வித்தியாசமின்றி மாரடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது. குறிப்பாக கொரோனா பரவலுக்கு பின்னர் மாரடைப்பு தொடர்பான அபாயம் பெரியார்-சிறியோர் வித்தியாசமின்றி தொடர்ந்து வருகிறது. இது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.