Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 29, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியைச் சார்ந்தவர் ஷாபி பெர்னாண்டஸ் (வயது 45). இவரின் மனைவி ஜியான். தம்பதிகளுக்கு 25 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவத்தன்று அங்குள்ள சேப்பல் சாலையில் இருக்கும் டோனி என்ற கடையில், ஷாபி பெர்னாண்டஸ் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர்.

வம்பிழுத்து வாக்குவாதம்: அச்சமயம் கடைக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தம்பதியின் மகள் மீது புகையை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் பெர்னாண்டஸ் நால்வர் கும்பலை கண்டித்துள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் உள்நோக்க திட்டத்துடன் வைத்ததாக தெரியவரும் கும்பல், பதிலுக்கு வாக்குவாதம் செய்து மனைவி மற்றும் மகள் கண் முன்னே பெர்னால்டசை கத்தியால் சரமாரியாக குத்தியது.

கத்தியால் குத்திக்கொலை: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெர்னான்டாஸ் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் மருத்துவர்கள் பெர்னாண்டஸின் மரணத்தை உறுதி செய்தனர். IND Vs SA: தென்னாபிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது இந்திய அணி; சொற்ப ரன்களில் அவுட்டாகிய இந்தியா.! 

தனிப்படை அமைத்து விசாரணை: இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்கு பின்னர், முக்கிய குற்றவாளியான முகம்மது ஷேக் என்ற 23 வயது நபர் அடையாளம் காணப்பட்டு, பாந்த்ராவில் இருக்கும் ஜேஜே காலனி பகுதியில் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவரது கூட்டாளிகள் தப்பி ஓடிய நிலையில், அவர்களை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில் மக்கள் கூடும் இடத்தில் உள்ள கடையில் நடந்த கொலை சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தின.