Seat Struggle in Indian Railway: டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு ரயிலின் கதவைத் திறக்காமல் வித்தவுட்டில் செல்லும் பயணிகள் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ..!
பயணச்சீட்டு எடுத்திருந்தும் ரயிலின் கதவை திறக்காததால் கடுப்பாகி கதவை உடைத்த நபரின் வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏப்ரல் 19, டெல்லி (Delhi): பொதுவாக இந்தியாவில் ரயில் பயணமானது சற்று கடினமாக தான் இருக்கும். ஏனென்றால் ரயில் எப்பொழுதும் கூட்டமாகவே இருக்கும். அதுவும் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தாலும் கூட, வட இந்தியாவில் பயணிகள் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு அங்கு வந்து அமர்ந்து விடுவர். சிலரோ டிக்கெட்டே எடுக்காமல் முன்பதிவு சீட்டுகளில் வந்து அமர்ந்துகொண்டு அட்டகாசம் (Seat Struggle) செய்வர். Comedian Yogi Babu Casted Vote: "மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும்".. ஹீரோ போல் வாக்களித்து யோகிபாபு அட்வைஸ்..!
அந்த வகையில் கஃபியாத் ரயிலில் பயணம் செய்வதற்கு ஒருவர் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அவர் அவருடைய குறிப்பிட்ட ரயில் பெட்டியில் ஏறுவதற்கு முயலும் பொழுது, டிக்கெட் எடுக்காத கும்பல் கதவினை அடைத்து வைத்துக்கொண்டு திறக்காமல் அட்டூழியம் செய்துள்ளது. இதனால் கடுப்பான டிக்கெட் எடுத்த பயணி ரயில்வே கதவினை உடைத்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.