ஏப்ரல் 19, சென்னை (Chennai): இந்திய நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் (Lok Shaba Elections 2024) ஆனது நாடு முழுவதும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா தேர்தல்கள் 2024-ன் வாக்கு பதிவானது இன்று தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. Newly Married Couple Cast Their Vote: திருமணம் முடிந்த கையோடு ஜனநாயகத்தின் முதல் கடமையை முடித்த ஜோடி.. வைரலாகும் வீடியோ..!

தொடர்ந்து மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு (Comedian Yogi Babu) அவரது மனைவி மஞ்சு பார்கவியுடன் சென்று அவரது வாக்கினை பதிவு செய்தார். வளசரவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்ற இருவரும் வாக்கு செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகி பாபு, “நாட்டை ஆள மக்களுக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும். அதற்காக மக்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். நாட்டை காக்க வேண்டும்” எனக் கூறினார்.