Shocking Video: பேருந்தின் படிக்கட்டில் தவறிவிழுந்த பெண்மணி; நடத்துனரின் செயலால் மறுபிறவி.. குவியும் பார்ட்டிகள்.!

நடத்துனரின் சாமர்த்தியமான செயலால் பெண்ணின் உயிர் மரணத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டது.

Conductor Saves Girl Life (Photo Credit: Facebook)

பிப்ரவரி 01, மேட்டூர் (Salem News): பேருந்துகளில் பயணம் செய்யும்போது மிகுந்த கவனத்துடன் நாம் பயணம் செய்ய வேண்டும். ஓடும் பேருந்தில் ஏறுவது, இறங்குவது போன்ற செயல்கள் நொடியில் நமது உயிரை பறிக்கும். அதேபோல பேருந்துகளில் படிக்கட்டு பயணம் ஆபத்துகளை விளைவிக்கும். இன்றளவில் பலரும் செல்போன் மீது அதிக நாட்டத்துடன் இருந்து வருகிறோம். எங்கு சென்றாலும் கைகளில் செல்போனை பார்த்தவாறு, சாலைகளிலும் அலட்சியமாக பயணிக்கிறோம். இது சில நேரங்களில் நமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களாகவும் அமையலாம்.

படிக்கட்டுக்கு அருகே அதிக கவனம் தேவை: அவ்வாறான சம்பவம் ஒன்று தற்போது நடைபெற்றுள்ளது. ஈரோட்டில் இருந்து மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண்மணி ஒருவர், தனது கைகளில் செல்போனை பிடித்தவாறு பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயற்சித்தார். பேருந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த நிலையில், தனது நிறுத்தத்திற்கு முன்னதாக அவர் படிக்கட்டு பகுதிக்கு வந்துள்ளார். அச்சமயம், அவர் படிக்கட்டுக்கு வந்தபோது திடீரென கை இடறி, படிக்கட்டில் இருந்து தவறி விழ முற்பட்டார். நடத்துனர் படிக்கட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த நிலையில், உடனடியாக சுதாரித்து பெண்ணின் கையைப் பிடித்து அவர் பத்திரமாக மீட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்றொரு பெண்மணியும் கைகொடுக்க, இருவருமாக சேர்ந்து பெண்ணின் உயிரை காப்பாற்றினார். Gold Silver Price Today: ரூ.47 ஆயிரத்தை கடந்ததும் சவரன் தங்கத்தின் விலை; நகைப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.! 

வைரல் வீடியோ: பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்த நபர், இவற்றை வேடிக்கை பார்த்தவாறு பதற்றத்தில் செய்வதறியாது இருந்தார். தவறி விழவிருந்த பெண்ணின் செல்போன் மட்டும் வழியிலேயே விழுந்து விட்டதாக தெரிய வருகிறது. இதனையடுத்து, பெண்மணி பேருந்து நிறுத்தப்பட்டதும் அங்கிருந்து இறங்கி சென்றார்.

தவிர்க்கப்பட்டு உயிரிழப்பு: இந்த சம்பவம் கடந்த ஜன. 17ஆம் தேதி நடைபெற்றதாக தெரியவரும் நிலையில், தற்போது அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெண்ணின் உயிரை நொடியில் காப்பாற்றிய நடத்துனர் மற்றும் பெண்ணுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த வீடியோவின் வாயிலாக நாம் உணர வேண்டியது ஒன்றுதான், செல்போன்களை கையில் எடுத்துக் கொண்டு பேருந்துகளில் ஏறவோ, இறங்கவோ முயற்சிப்பது நமது உயிரை இழக்க நேரிடும் என்பது நிதர்சனம். பேருந்து நடத்தினர் படிக்கட்டு பகுதியில் இல்லை என்றால், கட்டாயம் பெண்மணி பேருந்து சக்கரத்தின் பிடியில் சிக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.