திருப்பூர்: சிக்கனால் பஞ்சாயத்து.. காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை.!
திருப்பூரில் கணவர் வாங்கி வந்த சிக்கனை மனைவி சாப்பிட மறுத்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூலை 15, திருப்பூர் (Tiruppur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், சாக்கோட்டை புதுப்பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 29). இவர் அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். அப்போது தன்னுடன் பணியாற்றி வந்த சுபலட்சுமி என்று 25 வயது பெண்ணுடன் காதலில் விழுந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த ஜோடிகளுக்கு கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் இருவரும் திருப்பூரில் உள்ள வெள்ளக்கோவில் குட்டகாட்டு புதூர் பகுதியில் சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
சிக்கன் சாப்பிட மறுத்ததால் தற்கொலை :
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி கடந்த ஒரு மாதமாக மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், மேனகா, அவரது கணவர் கோவில் விழாவிற்காக திருச்சி சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மணிகண்டன் கடைக்கு சென்று சிக்கன் வாங்கி வந்த நிலையில் மனைவியிடம் அதனை சாப்பிடுமாறு கூறியுள்ளார். சகோதரி கோவிலுக்கு சென்றுள்ளதால் சிக்கன் சாப்பிட முடியாது என சுபலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். Gold Rate Today: கணிசமாக சரிந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!
போலீசார் விசாரணை :
இந்த விஷயம் குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் மணிகண்டனின் உயிரிழப்பை உறுதி செய்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)