Trending Video: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து, நூலிழையில் உயிர்தப்பிய பயணி; அதிர்ச்சியை தரும் பகீர் வீடியோ வைரல்.!

தானே இரயில் நிலையத்தில் 2 இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளின் துரித செயலால் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

Visual from Video (Photo Credit: Twitter)

ஜூலை 23, தானே (Viral Video): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தானே நகரில் இருந்து நேற்று வண்டி எண் 22183 LLT அயோத்யா விரைவு இரயில் புறப்பட்டது. நடைமேடை 7ல் இருந்து இரயில் புறப்பட்டு பயணம் செய்தது.

இந்நிலையில், இரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்த நபர், நடைமேடையில் நகர்ந்துகொண்டு இருந்த இரயிலின் மீது ஏறி பயணிக்க முயற்சித்துள்ளார். Accident: வெடித்து சிதறிய டயர், எதிர்திசையில் பாய்ந்து லாரி மீது மோதிய கார்; மூத்த அரசியல் தலைவர் & மகன் பரிதாப பலி.!

ஆனால், அவர் எதிர்பாராத விதமாக நிலநடுமாறி ரயிலுக்கு இடையே சிக்கிக்கொண்டார். உடனடியாக அங்கிருந்த இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சுமித் பால், சாகர் ரத்தோட் துரிதமாக செயல்பட்டு பயணியை மீட்டனர்.

உடலில் சில காயத்துடன் உயிர்தப்பிய அவரை மீட்டு அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காணொளி இரயில்வே பாதுகாப்பு படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.