Uttar Pradesh Train Accident (Photo Credit : @vani_mehrotra X)

நவம்பர் 05, மிசார்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சனூர் இரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு பயணிகள் ரயில் மோதி உயிரிழந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்திரபிரதேசம் மிசார்பூர் மாவட்டத்தில் சனூர் இரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. பிரயாக்ராஜ் - சோபன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் இந்த இரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் எதிரே உள்ள நடைமேடைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், படிகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளனர்.

தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி விபத்து:

இந்த நிலையில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஹவுரா - கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் இரயில், அவர்களின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். Big Breaking: அந்தரத்தில் தொங்கிய ரயில் பெட்டி.. பயணிகள் இரயில் - சரக்கு இரயில் மோதி கோர விபத்து.. சத்தீஸ்கரில் பயங்கரம்.. 10 பேர் பலி., பலர் படுகாயம்.!

பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்:

இந்த விஷயம் தொடர்பாக இரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கையில், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்வதற்காக தான் படிகள் கட்டப்பட்டுள்ளன. அதனை உபயோகித்து செல்வதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தண்டவாளத்தை கடக்க முற்படுவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்து தொடர்பான வீடியோ: