Richest Village In Asia: 'ஆசியாவின் பணக்கார கிராமம்' - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா..?

இந்தியாவில் உள்ள மாதாபர் கிராமம், ஆசியாவின் பணக்கார கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Richest Village In Asia (Photo Credit: @SrikantMatrubai X)

ஆகஸ்ட் 23, அகமதாபாத் (Gujarat News): ஆசியா கண்டத்தின் பணக்கார கிராமம் (Richest Village), இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புஜின் நகரில் உள்ள மாதாபர் (Madhapar) கிராமம் தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கிராம மக்கள் 32 ஆயிரம் பேர், மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாயை அங்குள்ள வங்கி கிளைகளில் டிபாசிட் (Deposit) செய்துள்ளனர். Maharashtra Bandh 2024: நாளை மகாராஷ்டிரா பந்த்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட்டம்..!

இங்கு மொத்தம் 20 ஆயிரம் வீடுகள் உள்ளன. உள்ளூரை சேர்ந்த 1200 குடும்பங்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு தனி நபருக்கும் சராசரியாக வைப்புத்தொகை ரூ.15 லட்சம் இருக்கிறது. கிராமத்தில் SBI, PNB, HDFC வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட 17 வங்கி கிளைகள் உள்ளன. இக்கிராமத்தில் சுகாதாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் பணக்கார கிராமம் என கருதப்படுகின்றது.

மாதாபர் கிராமத்தில் விவசாயம் தான் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு விளையும் பொருட்கள் மும்பைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றது. இங்கு வசிப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்தாலும், தங்கள் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவில் உள்ள இந்த கிராமத்து வங்கிகளில் தான் டெபாசிட் செய்து வருகின்றனர். இதுதான் மாதாபர் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணம் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.