Dating App Scam in Mumbai: டுபாக்கூர் ஹோட்டலும் கேடி பெண்களும்.. டேட்டிங் ஆப் மூலம் வலைவிரித்து கதறவிட்ட சம்பவம்..!
மும்பையில் டேட்டிங் ஆப் மூலம் ஹோட்டலுக்கு வரவைத்து பணம் பறிக்கும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.
ஜூலை 19, மும்பை (Maharashtra News): மும்பையில் டேட்டிங் ஆப் (Dating App) மூலம் மோசடிகள் நடந்த வண்ணம் உள்ளன. டிண்டர், ஹேப்பன் (Tinder, Happn) போன்ற டேட்டிங் செயலிகள் மூலம் சில பெண்கள் ஆண்களை குறி வைத்து பேசுகின்றனர். தொடர்ந்து அவர்களை நேரில் சந்திக்க வருமாறு வற்புறுத்துகின்றனர். பெண்களை சந்திக்க வரும் நபர்களை ரெட் ரூம் (Red Room) எனும் ஹோட்டலுக்கு அழைத்து செல்கின்றனர். Car Accident: சிறுவன் ஓட்டிய கார்.. தொழிலாளி மீது மோதி பரிதாப பலி.. பற்றி எரிந்த கார்..!
அங்க அந்தப் பெண்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அங்கிருந்து காணாமல் போய்விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து தான் மோசடி செய்ததை உணர்ந்த அந்த நபர்கள் அங்கிருந்து செல்ல முயலும் பொழுது அந்த ஹோட்டலை சேர்ந்தவர்கள் வந்து 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பில் என்று கூறி பணத்தினை வாங்குகின்றனர். அதனை தர மறுப்பவர்களை அடித்து துன்புறுத்துகின்றனர். இது தொடர்பாக பலர் இணையத்தில் தங்களது குமுறல்களை தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் முன்பு ஹனி ட்ராப் எனப்படும் சல்லாப எண்ணம் கொண்ட நபர்களை வலைவிரித்து, அவர்களை தனிமையான இடத்திற்கு வரவழைத்து பணம் பறித்து அனுப்பிய சம்பவங்கள் அதிகம் அரங்கேறின. தற்போதைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி கும்பலும் தனது செயல்பாடுகளை புதிய வழிகளில் மேற்கொண்டு வருகிறது.