Trending Video: போதையில் போலீசாரிடம் வம்பிழுத்த இளம்பெண்.. நடுரோட்டில் களேபரம்.!
சத்தீஸ்கரில் இளம்பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஜூலை 09, சத்தீஸ்கர் ( News): வடமாநிலங்களில் பெண்கள் மது போதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்வது, நடுரோட்டில் அலப்பறை செய்வது, மெட்ரோ ரயிலில் ஆபாச நடனம் போன்ற சர்ச்சை செயல்கள் தொடர்ந்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பவுஸ் நகரில் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நேற்று நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், போதையில் தட்டு தடுமாறும் பெண் போலீசாரிடம் கூச்சலிட்டு பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். Trending Video: மெட்ரோவில் ஆபாச நடனமாடிய பெண்.. ரீல்ஸ் பெயரில் அநாகரீகம்.!
பெண்மணி மதுபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)