Food Delivery with Horse: பெட்ரோல் தட்டுப்பாடால் அதிர்ச்சி: குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்த ஊழியர்.!
லாரி ஓட்டுனர்களுக்கு எதிராக அமல்படுத்தப்பட்ட வாகன சட்டத்தால், வேலை நிறுத்தம் காரணமாக எரிபொருள் விநியோகம் என்பது பாதிக்கப்பட்டது. இதனால் வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் விநியோகம் தடைபட்டது.
ஜனவரி 03, ஹைதராபாத் (Social Viral): வாகன திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று டீசல் மற்றும் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படாமல் இருந்தன. பல இடங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில், பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், குதிரையில் சென்று உணவை டெலிவரி செய்தார். இதுதொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. Assam Accident: லாரி - பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து: 12 பேர் பலி., 25 பேர் படுகாயம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)