Union Budget 2024: வேளாண்துறைக்கு ரூ.1.5 இலட்சம் கோடி.. விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்.. வெளியான மத்திய பட்ஜெட் 2024..!
இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை.23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் . மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பின் முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) தாக்கல் செய்து வருகிறார். அதன்படி வேளாண்துறையில் வரும் 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெரும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். காலநிலை மாற்றத்தினால் பயிற்சிகள் பாதிக்கப்படாத வகையில் திட்டம் அறிமுகம் செய்யப்படும். நிலக்கடலை, எள், சூரியகாந்தி உற்பத்தி அதிகரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும். விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அமல்படுத்த மாநில அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்துறைக்காக ரூ.1.5 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அடக்கவிலையை காட்டிலும் 20 % இலாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வழிவகை செய்யப்படும். பருவநிலையை தாக்குப்பிடித்து வளர்ச்சியடையும் தன்மை கொண்ட 102 வகையிலான பயிர்கள் அறிமுகம் செய்யப்படும். Elon Musk Shares AI Video: உலகத் தலைவர்களின் பேஷன் ஷோ.. எலான் மஸ்க் வெளியிட்ட ஏஐ வீடியோ..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)