GST Council Meeting (Photo Credit : @ANI X / FB)

செப்டம்பர் 04, புதுடெல்லி (New Delhi News): டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தலைமையில் நேற்று (செப்டம்பர் 03) ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி (GST) வரி விதிப்பு அடுக்கில் 12%, 28% வரிகள் நீக்கப்பட்டு 5% மற்றும் 18% வரிகள் மட்டுமே செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உயிர் காக்கும் மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட 12% வரி பூஜ்ஜியமாக குறைக்கப்படுகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியும் நீக்கப்படுகிறது.

கல்வி சார்ந்த பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து :

மாணவர்களுக்கான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி வரியும் முழுவதும் நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஆயுள் காப்பீடு ஜிஎஸ்டி வரம்புக்குள் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் உட்பட சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. அதன்படி ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உட்பட பராமரிப்பு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. Chandra Grahan 2025: செப் 7-ல் நிகழும் சந்திர கிரகணம்.. இந்த 5 ராசிக்காரர்கள் கவனமா இருங்க.! 

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்கள் :

குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், டயப்பர் போன்றவற்றிற்கான வரி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. வெண்ணெய், பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. தையல் இயந்திரம், அதற்கான உதிரி பாகம், நொறுக்கு தீனிகள் போன்றவற்றுக்கான வரையும் 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. ஆட்டோ, இருசக்கர வாகனம், சரக்கு வாகனம், ஏசி, டிவி, கார் போன்ற பொருட்களுக்கான வரி 28%ல் இருந்து 18% ஆக குறைகிறது. மருத்துவ துறையில் தர்மா மீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனை பொருட்கள், கண்ணாடி மீதான வரி 5% ஆக குறைக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்கள் :

இதில் சிகரெட், பான் மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்கள் போன்றவற்றுக்கான வரி 28%ல் இருந்து 40% ஆக உயர்த்தி சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 1500 சிசி மேல் உள்ள சொகுசு பைக்குகள், இருசக்கர வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்களுக்கான வரி 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 350 சிசி மற்றும் அதற்கு அதிகமான இருசக்கர வாகனங்கள், படகுகள், காஃபின் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்பட இருக்கிறது.

வேளாண் பொருட்களின் வரியில் மாற்றம் :

வேளாண் துறை சார்ந்த கருவிகள், டிராக்டர் பாகங்கள், அதற்கான டயர் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 18ல் இருந்து 5% ஆக குறைகிறது. உயிரி பூச்சிக்கொல்லிகள், சொட்டு நீர் பாசன அமைப்புகள், தோட்டக்கலை இயந்திரம், வேளாண் இயந்திரம் போன்றவற்றிற்கான வரியும் 12%ல் இருந்து 5% ஆக குறைகிறது. ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட் விலைக்கு 40% வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி தொடர்பான முழு விபரங்கள் :