செப்டம்பர் 03, சென்னை (Technology News): ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 15டி ஸ்மார்ட்போனை (Realme 15T Smartphone) இந்தியாவில் நேற்று (செப்டம்பர் 02) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, 50எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட அசத்தலான சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்பதிவில் பார்க்கலாம். Salesforce Layoffs: 4,000 பேரின் வேலைக்கு ஆப்பு வைத்த ஏஐ.. சேல்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு பேரிடி..!
ரியல்மி 15டி விலை (Realme 15T Price):
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் - விலை ரூ.20,999
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் - விலை ரூ.22,999
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் - விலை ரூ.24,999
வரும் செப்டம்பர் 05ஆம் தேதி முதல் ஆன்லைன் தளமான பிளிப்கார்ட், ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் மற்றும் ஆப்லைனில் பிரத்யேக கடைகளில் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி, இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 வரை தள்ளுபடி அளிக்கப்படும். ப்ளோயிங் சில்வர், சில்க் ப்ளூ, மற்றும் சூட் டைட்டானியம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.
ரியல்மி 15டி சிறப்பம்சங்கள் (Realme 15T Specifications):
- இதில், 6.57-இன்ச் 4ஆர் கம்போர்ட்+ அமோல்டு டிஸ்பிளே உடன், 1,080×2,372 பிக்சல்ஸ், 4000nits பீக் பிரைட்னஸ், 2160Hz PWM டிம்மிங் என பல அம்சங்கள் உள்ளன.
- மேலும், சக்திவாய்ந்த ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 SoC சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 GPU கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது. இதுதவிர, 6,050sq mm ஏர்ஃப்ளோ விசி கூலிங் சிஸ்டமை கொண்டுள்ளது. நீண்ட நேரம் கேம் விளையாடினாலும் போன் சூடாகாமல் பாதுகாக்கும்.
- ரியல்மி யுஐ 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன், ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேமரா பொறுத்தவரை, 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், 50எம்பி செல்பி கேமரா உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், AI எடிட் ஜெனி, AI ஸ்னாப் மோட், AI லேண்ட்ஸ்கேப் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் என 3 வேரியண்ட்களில் புதிய ரியல்மி 15டி வந்துள்ளது. பேட்டரி பொறுத்தவரை, 7000mAh பேட்டரி கொண்ட 60W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது.