Heavy Fog in Delhi: டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு, மஞ்சு பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!

இந்திய தலைநகர் டெல்லி உட்பட அதன் அண்டை மாநிலங்கள், குளிர்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம்.

Delhi Winter Season (Photo Credit: @ANI_Digital X)

பிப்ரவரி 02, புதுடெல்லி (New Delhi): வட மாநிலங்களில் கோடை காலத்தில் மக்களை கடுமையான குளிர் வாட்டி (Delhi Winter) வதைக்கும். இவ்வாறான தருணங்களில் டெல்லி, கிழக்கு உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்கள் பனிப்பொழிவு மற்றும் மஞ்சுபனி ஆகிய பிரச்சனைகளை மக்கள் தினமும் எதிர்கொள்ள நேரிடும். இதனால் விமான சேவை, இரயில் சேவை உட்பட வான்வழி மற்றும் தரைவழி போக்குவரத்து பாதிக்கப்படும். காலையில் ஆறு மணிக்கு மேல் விடியல் வந்துவிடும் எனினும், டெல்லி, ராஜஸ்தான், கிழக்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பகல் 11:30 மணியளவில் கூட 500 மீட்டர் அளவில் மட்டுமே சாலைகளில் பார்வைத்திறன் இருக்கும். சில நேரங்களில் 50 மீட்டர் அளவு மட்டுமே பார்வை திறன் கிடைக்கும். மக்கள் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் தற்காலிக முகாம்களில் நெருப்பை மூட்டி குளிரிலிருந்து தப்பிப்பார்கள். பகல் வேலைகளில் 18 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் டெல்லியின் வெப்பநிலை, இரவு நேரங்களில் 12.3 அளவில் சென்றுவிடும். Meta Remove 26mn Posts: ஒரே மாதத்தில் சர்ச்சையான 26 மில்லியன் முகநூல், இன்ஸ்டா பதிவுகள் நீக்கம்: மெட்டா அறிவிப்பு.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now

Share Now