பிப்ரவரி 02, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் 3.3 பில்லியன் அளவிலான பயனர்கள் பயன்படுத்தும் பிரதான பொழுதுபோக்கு சமூக வலைதளம் பேஸ்புக் (Facebook). இந்தியாவில் மட்டும் பேஸ்புக்கை 314 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது சர்வதேச அளவில் அதிக அளவு முகநூல் பயனர்களைக் கொண்ட நாடாக இந்தியாவை முதல் இடத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அமெரிக்காவில் அடுத்தபடியாக 175 மில்லியன் மக்கள் பேஸ்புக் செயலியை உபயோகம் செய்கிறார்கள்.
26 மில்லியன் இடுகைகள் நீக்கம்: சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து அதிகரித்து வருவதால், சமூக வலைத்தளத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களும் அதனை கட்டாயப்படுத்துகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் முகநூலுக்கு எதிரான 13 கட்டுப்பாடுகளை மீறிய 19.8 மில்லியன் இடுகைகளையும், இன்ஸ்டாகிராமுக்கு எதிரான 12 கட்டுப்பாடுகளை மீறியதாக 6.2 மில்லியனுக்கும் அதிகமான இடுகைகளையும் கடந்த டிசம்பர் மாதம் நீக்கியதாக மெட்டா (Meta) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Trending Video: யானையுடன் போட்டோ எடுக்க முயற்சி; துரத்திய யானையால் பதறி ஓடிய இருவர்.!
ஒரு மாதத்திற்குள் பதிவிட்டு நீக்கப்பட்ட பதிவுகள்: டிசம்பர் மாதம் 01ம் தேதி முதல் 31ம் தேதி வரையில், இந்திய அளவில் எழுப்பப்பட்ட 44,332 கோரிக்கைகளில் 33,072 கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய 11,260 புகார்களில், முகநூலின் கொள்கைப்படி ஆய்வு செய்து 6,578 இடுகைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 4,682 இடுகைகள் முகநூல் விதிக்கு உட்பட்டு இருப்பதால் அவை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நவம்பரை விட டிசம்பரில் அதிகம்: அதேபோல, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் 19,750 புகார்கள் பெறப்பட்டுள்ளன, அவையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் முகநூலுக்கான கொள்கையிலிருந்து முரண்பாடாக செயல்பட்ட 18.3 மில்லியனுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டு, இன்ஸ்டாகிராமில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான இடுகைகள் மெட்டாவால் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 2023 நவம்பர் மாதத்தை விட 2024 டிசம்பரில் அதிக சர்ச்சை பதிவுகளை நீக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது.