Ayodhya: அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி.. கட்டுமான நிறைவு விழா.!
உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலின் கோபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காவிக் கொடி ஏற்றி வைத்தார்.
நவம்பர் 25, அயோத்தி (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் கோபுரத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி காவிக்கொடி ஏற்றி வைத்தார். ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதை மக்களுக்கு பறைசாற்றும் வகையில் காவி கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் நிகழ்வும் நடைபெற்றது. சுமார் 10 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்ட கோபுரத்தில் முக்கோண வடிவில் கொடி இடம் பெற்றிருந்தது. இந்த கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை எடுத்துரைக்கும் பொருட்கள், சூரியனின் படம், ஓம் என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. Trending Video: பேசியபடி பறிபோன உயிர்.. பெயிண்ட் கடையில் நடந்த சோகம்.. பதறவைக்கும் வீடியோ.!