Kargil Vijay Diwas 2024: கார்கில் விஜய் திவாஸ் 25ம் ஆண்டு நினைவுதினம்; பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மரியாதை.!
லடாக்கில் உள்ள கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் பொருட்டும், கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடவும் ஒவ்வொரு ஆண்டும் கார்கில் விஜய் திவாஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜூலை 26, லடாக் (Ladakh News): இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1999ம் ஆண்டு லடாக் பகுதியில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை போர் நடைபெற்றது. இந்த போரின் முடிவில் இந்திய வெற்றிபெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும்பொருட்டும், மறைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் பொருட்டும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26ம் தேஹத்தி கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உட்பட பலரும் கார்கிலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று லடாக்கில் உள்ள கார்கிலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். கார்கில் வெற்றி தினம் மற்றும் மறைந்த வீரர்களின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் லடாக் சென்றுள்ளார். Paris Olympics 2024: கோலாகலமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024; விறுவிறுப்பாக நடைபெறும் ஆட்டங்கள்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)