Lorry - Auto Rickshaw Crash: ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து: பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலி.. ஆத்திரத்தில் லாரியை கொளுத்திய மக்கள்.!

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானதில் பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

Lorry - Auto Rickshaw Crash: ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்து: பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலி.. ஆத்திரத்தில் லாரியை கொளுத்திய மக்கள்.!
Truck Auto Collision Anger Peoples Fire (Photo Credit: @jsuryareddy X)

ஜனவரி 06, மஹபூப் நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப் நகர் மாவட்டம், பாலா நகர், சௌராஷ்டிரா பகுதியில் நேற்று மாலை ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை ஒன்றும் விபத்தில் பலியானது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிகொள்ளவே, விரைந்து வந்த அதிகாரிகள் மக்களை கட்டப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்களில் சிலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. Hollywood Actor Died: விமானம் கடலில் விழுந்து நொறுங்கி சோகம்: பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் உட்பட 4 பேர் மரணம்..! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement