Shocking Video: சாலையில் நடந்து சென்ற பெண், குழந்தையை கொடூரமாக தாக்கிய நாய்கள்; பதறவைக்கும் காணொளி.!
அமைதியாக சாலையில் நடந்து சென்ற பெண்ணை கீழே தள்ளிய நாய்கள், அவரையும், அவருடன் வந்த குழந்தையையும் கடித்துக் குதறியது.
செப்டம்பர் 23, கரீம்நகர் (Telangana News): சாலையோரம் திரியும் நாய்கள், பெரும்பாலும் தங்களுக்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு உயிர்வாழும் தன்மை கொண்டவை. இதனால் அவைகள் நோய்வாய்ப்படும் சூழலும் அதிகம். அந்த வகையில், அவ்வப்போது இவை மூர்க்கத்தனம் கொண்டு மனிதர்களை தாக்குவது தொடர்ந்து பல இடங்களில் நடந்து வருகிறது. ஒருசில நேரம் சிறார்களை கடுமையான அளவில் தாக்கி கொல்வதும் நடக்கிறது. இதனிடையே, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகர் (Dog Attacked Woman & Child) பகுதியில், பெண்மணி ஒருவர் கைக்குழந்தையுடன் சாலையில் நடந்து சென்றார். அச்சமயம் அங்கு வந்த இரண்டு நாய்கள் அவரை தாக்கி கீழே தள்ளியது. பின் இருவரையும் கடித்துக் குதறியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்த நிலையில், நாய்கள் (Dog Attack Video) அங்கிருந்து ஓடின. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நாய்களின் எண்ணிக்கையை உள்ளூர் நிர்வாகம் ஒடுக்க முயற்சிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர். இந்த சம்பவம் கடந்த செப்.21 அன்று (இரண்டு நாட்களுக்கு முன்பு) நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Breaking: 4 பேர் கும்பலால் நர்சிங் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; தேனியில் சீரழித்து திண்டுக்கலில் தவிக்கவிட்ட பரிதாபம்.!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)