Traffic Awareness In Hyderabad: போக்குவரத்து விழிப்புணர்வு; வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்த வீடியோ வைரல்..!
ஐதராபாத்தில் போக்குவரத்து வாகனம் இருப்பதை போன்ற போலியான உருவத்தை வைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஜூன் 27, ஐதராபாத் (Telangana News): ஐதராபாத் போக்குவரத்து காவல்துறையினர் (Hyderabad Traffic Police) ஒரு சிறப்பான போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூரத்தில் போக்குவரத்து காவல்துறையினர் வாகனம் இருப்பதை கண்டு, உடனடியாக தலைக்கவசத்தை அணிந்துள்ளனர். பின்னர், இருசக்கர வாகனத்தில் அதன் அருகில் செல்லும்போது, அது வெறும் போலியான உருவம் என தெரியவந்தது. School Teacher Sexual Harassment: பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்..!
இந்த வீடியோவை ஐதராபாத் போக்குவரத்து காவல்துறையினரின் அதிகாரபூர்வ X-வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நூதன போக்குவரத்து விழிப்புணர்வு முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.