Cobra Swallowing A Medicine Bottle: மருந்து பாட்டிலை விழுங்க முயன்ற நாகப்பாம்பு; வலியால் துடிதுடித்த வீடியோ வைரல்..!
ஒடிசாவில் நாகப்பாம்பு ஒன்று, மருந்து பாட்டிலை வாயில் விழுங்கியபடி வலியால் அவதிப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
ஜூலை 03, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நாகப்பாம்பு (Cobra) ஒன்று, இருமல் மருந்து பாட்டிலை விழுங்கியுள்ளது. இந்த பாட்டில் அதன் தொண்டையில் சிக்கி மிகவும் சிரமப்பட்டது. இதுகுறித்து, பாம்பு ஹெல்ப்லைனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், அதன் பொதுச் செயலாளர் சுபேந்து மல்லிக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர், தனது வைத்திருந்த கொக்கி முனையால் நாகப்பாம்பின்கீழ் தாடையை மெதுவாக விரித்து பாட்டிலை வெளியில் எடுத்தார். பின்னர், அந்த நாகப்பாம்பைப் பிடித்துச் சென்று, நகருக்கு வெளியே இருந்த காட்டில் கொண்டுபோய் விட்டார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில், 'நாகப்பாம்பு அதன் இரையென பாட்டிலை விழுங்கியுள்ளது. இதனால் அது தொண்டையில் சிக்கிக் கொண்டு வலியால் துடிதுடித்துள்ளது' என்றார். North Pacific Ocean Earthquake: வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..!
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)