ஜூலை 03, பெய்ஜிங் (World News): இன்று காலை வடக்கு பசிபிக் பெருங்கடலில் திடீரென நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் (Richter Scale) 5.0 ஆக பதிவாகியுள்ளது. இதனை ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Cumin Benefits: சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
வடக்கு பசிபிக் பெருங்கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 44.13 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 156.54 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.