Instagram Influencer Arrested: படிக்காதவன் விவேக் ஸ்டைலில் ரீல்ஸ் செய்து வந்தவருக்கு.. காவல்துறையினர் வைத்த ஆப்பு..!

ஆபத்தான முறையில் வாகனத்தின் மேற்கூரையில் நின்றுக் கொண்டு பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Instagram Influencer (Photo Credit: Instagram)

ஜூன் 6, ராஜஸ்தான் (Rajasthan News): சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்துசெல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும். வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலைவிதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும். இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வகையில் இளைஞர் இஸ்மாயில் சௌத்ரி ரீல் செய்துள்ளார். அந்த வீடியோவில், இரு மஹிந்திரா கார் வாகனங்களின் மேற்கூரை மீது நின்றப்படி அவர் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ ராஜஸ்தானில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றின் சுரங்க பாதைக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே 17ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை ஆராய்ந்த காவல்துறையினர், வீடியோவில் தெரியும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து உரிமையாளர்களை கண்டறிந்து, இஸ்மாயில் சௌத்ரியை கைது செய்துள்ளனர். Japan To Launch Dating App: ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்.. டேட்டிங் ஆப் மூலம் அதிகரிக்க புதிய முயற்சி..!

 

View this post on Instagram

 

A post shared by Ismail Choudhary (@ismailchoudhary0041)

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)