CSK Vs MI: தோனியை சீண்டிய தீபக் சாஹர்.. பேட்டால் செல்லமாக அடித்த தோனி.., வீடியோ உள்ளே..!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை போட்டியின் போது, எம்எஸ் தோனிக்கும் தீபக் சாஹருக்கும் இடையே மைதானத்தில் சில வேடிக்கைகள் காணப்பட்டன.

மார்ச் 24, சென்னை (Sports News): 2025 ஐபிஎல் (IPL 2025) தொடரில் நேற்று (மார்ச் 23) நடைபெற்ற 3 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians) அணிகள் மோதின. இந்த போட்டியில், எம்எஸ் தோனி (MS Dhoni) மற்றும் தீபக் சாஹர் இடையே மைதானத்தில் சில லேசான வேடிக்கை காணப்பட்டது. தீபக் சாஹர் (Deepak Chahar) 2018ஆம் ஆண்டு முதல் கடந்த 2024ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவர். இந்நிலையில், 19வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா ரன் அவுட் ஆனதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்ய வந்த எம்எஸ் தோனியை அவர் விளையாட்டுத்தனமாக ஸ்லெட்ஜ் செய்ய முயன்றார். எம்எஸ் தோனி கிரீஸுக்கு வந்தவுடன், தீபக் சாஹர் அவரிடம் சென்று கைதட்டி, பேட்ஸ்மேனுக்கு அருகில் பீல்டிங் செய்ய விரும்புவதாக குறிப்பிட்டார். இருப்பினும், போட்டிக்குப் பிறகு, எம்.எஸ். தோனி நகைச்சுவையாக தீபக் சாஹரை பின்னால் இருந்து மட்டையால் அடித்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. CSK Vs MI Highlights: மஞ்சள் படை மாஸ் வெற்றி.. ரவீந்திரா, ஜடேஜா அதிரடி ஆட்டம்..! வின்னிங் ஷாட்டில் தல.. இறுதியில் ட்விஸ்ட்.!
வீடியோ இதோ:
சாஹரை பேட் மட்டையால் அடித்த தோனி:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)