
மார்ச் 23, சென்னை (Sports News): டாடா இந்தியன் பிரீமியர் லீக் 2025 (TATA Indian Premier League 2025) போட்டியில், 23 மார்ச் 2025 ஞாயிற்றுக்கிழமை இன்று, இரவு 07:30 மணியளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் (Chennai Super Kings Vs Mumbai Indians) அணிகள் மோதும், ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டி (CSK Vs MI 2025), சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் (Star Sports Tamil) பக்கத்தில் காணலாம். Yogi Babu: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியின் வர்ணனையாளராக யோகிபாபு; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.!
மும்பை அணி 155 ரன்கள் குவிப்பு:
இந்நிலையில், மும்பை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரயான் 7 பந்துகளில் 13 ரன்கள், கலீல் அகமத் 7 பந்துகளில் 11 ரன்கள், சிவம் டியூப் 26 பந்துகளில் 29 ரன்கள், நமன் திர் 12 பந்துகளில் 17 ரன்கள், தீபக் ஸஹர் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்தனர். 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் நூர் அகமத் 4 விக்கெட், கலீல் 3 விக்கெட் எடுத்தனர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இறுதி வரை ரவீந்திரா ஆட்டமிழக்காமல் வெற்றிவாகை சூடினார்.
சென்னை அணி மாஸ் வெற்றி:
சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரவீந்திரா 45 பந்துகளில் 65 ரன்கள் அடித்து, இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ருத்ராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 53 ரன்கள், ஜடேஜா 18 பந்துகளில் 17 ரன்கள் அடித்தனர். 19.1 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. இறுதியில் ஜடேஜாவின் விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய தோனி தனது ஸ்டைலில் முடித்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவீந்திராவுக்கு அவ்வாய்ப்பை வழங்கினார். இதனால் 19.1 வது ஓவரில் சிக்ஸர் அடித்த ரவீந்திரா, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
தோனியின் மின்னல் வேக செயல்பாடு:
𝙁𝙖𝙨𝙩. 𝙁𝙖𝙨𝙩𝙚𝙧. 𝙈𝙎 𝘿𝙝𝙤𝙣𝙞 🫡
📹 Watch #CSK legend's jaw-dropping reflexes behind the stumps 🔥
Updates ▶ https://t.co/QlMj4G7kV0#TATAIPL | #CSKvMI | @ChennaiIPL | @msdhoni pic.twitter.com/S26cUYzRd8
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
ரோஹித் & கலீல் விக்கெட் எடுத்த ரேயான்:
How's that for a start #CSK fans? 💛
Khaleel Ahmed strikes twice in the powerplay with huge wickets of Rohit Sharma and Ryan Rickelton 💪
Updates ▶️ https://t.co/QlMj4G6N5s#TATAIPL | #CSKvMI | @ChennaiIPL pic.twitter.com/jlAqdehRCq
— IndianPremierLeague (@IPL) March 23, 2025