கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. பிஞ்சுகளின் புகைப்படங்களை கண்டு கதறியழும் பெண்மணி.!

கும்பகோணம் பள்ளி குழந்தைகள் தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளின் புகைப்படங்களுக்கு கண்ணீருடன் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Kumbakonam Fire Accident (Photo Credit : @polimernews X)

ஜூலை 16, கும்பகோணம் (Thanjavur News): கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா எனும் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 ல் நினைவு அஞ்சலியும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று 21-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளின் புகைப்படம் அடங்கிய பேனர் பள்ளியின் முன்பு வைக்கப்பட்டு பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே அஞ்சலி செலுத்த வந்த பெண்மணி ஒருவர் குழந்தைகளின் புகைப்படத்தை கண்டு கதறியழுத வீடியோ இணையத்தில் வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வானிலை: இன்று முதல் கொட்டித்தீர்க்கபோகும் கனமழை.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.! 

புகைப்படத்தை கண்டு அழுத்த பெண்ணின் வீடியோ :

Video Credit : kumudamNews24x7

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement