Elephant BabiesMorning Walk: குட்டி யானைகளின் சுட்டி நடைப்பயிற்சி; தெப்பக்காடு யானைகள் முகாமில் நெகிழ்ச்சி.!

தாய்களை பிரிந்த குட்டி யானைகள் பிள்ளைகள் போல பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் காணொளியை வெளியிட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

Theppakadu Elephant Habitation Center (Photo Credit: @supriyasahuias X)

ஜூன் 23, தெப்பக்காடு (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி (Masinigudi), தெப்பக்காடு பகுதியில் யானைகள் பாதுகாப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் கைவிடப்பட்ட 3 யானைக்குட்டிகளை வனத்துறை பாதுகாத்து வருகிறது. இதுகுறித்து வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டின் தெப்பக்காடு யானைகள் முகாமில் யானைக்குட்டிகள் தங்கள் அன்பான பராமரிப்பாளர்களுடன் காலை நடைபயிற்சி மேற்கொள்கின்றன. சமீபத்தில் கைவிடப்பட்ட மூன்று கன்றுகளை இந்த முகாம் கவனித்து வருகிறது. குட்டி யானைகள் மிகவும் இளமையாக உள்ளன. அவை பிறந்து 4-5 மாதங்கள் மட்டும் இருக்கும். எனவே தாயின் பால் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் மிகவும் பாதிக்கப்படும். எங்களிடம் 24X7 பராமரிப்பை வழங்குவதற்கு ஏழு அர்ப்பணிப்புள்ள பாதுகாவலர்கள் உள்ளனர்.அவர்கள் கன்றுகளை தங்கள் சொந்த குழந்தைகளாக பராமரிக்கின்றனர். தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு, குட்டி யானைகளை அறிவியல் பூர்வமாக நிர்வகிப்பதற்காக உள்ளூர் குழு மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கண்டு மகிழுங்கள். BAN Team Trolled by WB Police: 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்திய அணி; வங்கதேச அணியை கலாய்த்து ட்விட் பதிவிட்ட மேற்குவங்க காவல்துறை.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement