
மே 12, திபெத் (World News): திபெத்தின் (Tibet) ஷிகாட்ஷே நகரில் இன்று (மே 12) அதிகாலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் லேசாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பயத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. Man Dies: செல்லப்பிராணியை காப்பாற்றச் சென்று நடந்த சோகம்.. கடலில் பறிபோன உயிர்.!
திபெத் நிலநடுக்கம்:
இந்திய டெக்டோனிக் தட்டு யூரேசிய தட்டுடன் மோதும் ஒரு பெரிய புவியியல் பிளவு கோட்டில் திபெத் மற்றும் நேபாளம் அமைந்துள்ளன. டெக்டோனிக் தட்டுகள் மோதுவதால், திபெத்திய பீடபூமியில் நிலநடுக்கம் அடிக்கடி நிகழும். இதனால் டெக்டோனிக் மேல்நோக்கி உயர்வுகள் ஏற்படுகின்றன.