
மார்ச் 21, பேங்காக் (World News): தாய்லாந்து நாட்டின் இயற்கை எழில்வளம் மற்றும் சுற்றுலாவின் பன்முகத்தன்மை, உலகளவிலும் அதிகம் விரும்பப்படுகிறது. அதனாலேயே இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களும் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று, அங்குள்ள பல்வேறு இடங்களை நேரில் பார்த்து வியந்து வருகின்றனர். இயற்கை எழில் நிறைந்த தாய்லாந்து, பல நாட்டு மக்களின் மனதை கவர்ந்த இடங்களில் ஒன்றாக இருக்கிறது. Trending Video: ஈவுஇரக்கமற்ற மனிதா? தெருநாயை சங்கிலியில் கட்டி சாலையில் இழுத்து வந்த நபர்; வார்த்தையால் வெளுத்து வாங்கிய பெண்.!
4 வயது யானைக்கு பிறந்தநாள்:
இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் வசித்து வரும் பயுக் சிசை பும் (Phauek Sichai Phum) என்ற 4 யானைக்கு வயது ஆகிறது. பிப்.28 அன்று யானை பிறந்தது. யானை பிறந்த தினத்தை கொண்டாடும் பொருட்டு, அதன் உரிமையாளர் யானைக்கு மக்காச்சோளம், வாழைப்பழம், தர்பூசணி கொண்டு அலங்கரித்த கேக்கை வடிவமைத்தார். நடுவில் மெழுகு வைத்து, தீபத்தை தனது துதிக்கையால் அணைத்த பின்னர், யானை தனது பிறந்தநாளை ருசியான பழங்களை சாப்பிட்டு கொண்டாடி மகிழ்ந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
யானை மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிய காணொளி:
View this post on Instagram