NEET (Photo Credit: Pixabay)

ஜூன் 02, டெல்லி (Delhi News): முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய ஏற்பாடுகளை செய்வதற்காக வரும் ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் நுழைவு தேர்வு (NEET-PG 2025) தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  Road Accident: பைக் மீது டிப்பர் லாரி மோதி கோர விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி உள்ளே..!

முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைப்பு:

இதுதொடர்பாக, தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 15, 2025 அன்று, நடைபெறவிருந்த முதுகலை நீட் நுழைவு தேர்வு கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்துவதற்கான தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தேசிய தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கை: