IND Vs BAN ICC Men's T20 WC 2024 (Photo Credit: @WBPolice X)

ஜூன் 22, அன்டிகுவா (Sports News): அமெரிக்கா மற்றும் கரீபிய தீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டியில், சூப்பர் 8 பிரிவில், நேற்று ஏழாவது ஆட்டம் இந்தியா - பங்களாதேஷ் (IND Vs BAN) அணிகள் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள், அதிரடியாக தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் வாயிலாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்திய அணி சேர்த்து இருந்தது.

அசத்தல் ஆட்டத்தை வெளியிட்ட இந்திய அணி:

இந்திய அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரோஹித் சர்மா 17 பந்துகளில் 23 ரன்னும், விராட் கோலி 28 பந்துகளில் 37 ரன்னும், ரிஷப் பண்ட் 24 பந்துகளில் 36 ரன்னும், சிவம் டியூப் 24 பந்துகளில் 34 ரன்னும், ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 50 ரன்னும் அடித்து அசத்தியிருந்தனர். இதனையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, தொடக்கத்தில் நின்று ஆடுவது போல தோன்றினாலும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் திணறிப்போனது. Central Government Rules For Employees: காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர உத்தரவு; அரசு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு நெறிமுறைகள்.. மத்திய அரசு எச்சரிக்கை..! 

50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி:

வங்கதேச அணியின் சார்பில் விளையாடியவர்களில் தாஸ் பத்து பந்துகளில் 13 ரன்னும், ஹசன் 31 பந்துகளில் 29 ரன்னும், சாந்தோ 32 பந்துகளில் 40 ரன்னும், ஹொசைன் 10 பந்துகளில் 24 ரன்னும் அடித்திருந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்த வங்கதேச அணி, தனது இலக்கை நெருங்க முடியாமல் திணறியது. மொத்தமாக அந்த அணியினர் 146 ரன்கள் மட்டும் எடுத்திருந்தனர். இதனால் இறுதியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

மேற்குவங்க காவல்துறையினரின் கலாய்:

இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக சிறப்பித்து வரும் நிலையில், மேற்கு வங்க காவல்துறையினர் வங்கதேச கிரிக்கெட் அணையினரை கலாய்க்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளனர். வங்கதேச கிரிக்கெட் அணி தங்களை "பெங்கால் டைகர்" என்று பெருமிதத்துடன் அறிமுகம் செய்து கொள்ளும் நிலையில், வங்கதேச அணியின் தோல்வியைத்தொடர்ந்து புலி ஒன்று அழுவதைப் போலவும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றியை கொண்டாடுவது போலவும் தயார் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை காவல்துறையினர் தங்களின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.