Erode East By Poll Result; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி..!

திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் தொடர்பான விஷயங்களில் மக்களின் முடிவு இன்று தெரியவந்துள்ளது. தபால் வாக்குகளில் தொடங்கிய முன்னிலை இறுதி வரை நீடித்தது.

E.V.K.S Elagovan, Congress Party (Photo Credit: ANI)

மார்ச் 02: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் (Erode East Bye Poll) ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (E.V.K.S Elangovan) 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் (Congress) கட்சியின் சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,209 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் (AIADMK) கே.எஸ் தென்னரசு 43,657 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா (NTK Candidate) 10,804 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகளும் பெற்றனர். கடந்த தேர்தலை விட அமோக வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி அடைந்துள்ளார். Election Results: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் முன்னிலை யார்?.. விபரம் உள்ளே..!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement