குடிபோதையில் வகுப்பறையில் உருண்ட அவலம்.. அரசுப்பள்ளி ஆசிரியரின் அட்டூழியம்.!

திருச்சியில் ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் (Trichy Drunken School Teacher Video) வகுப்பறையில் உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Manapparai Teacher (Photo Credit : @annamalai_k X)

ஜூலை 09, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மது போதையில் வகுப்பறைக்கு வந்துள்ளார். பின் வகுப்பறையில் படுத்து உருண்டவர், மேசை, நாற்காலியை கீழே தள்ளி கத்தி ரகளை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இந்த வீடியோவை தனது எக்ஸ தள பக்கத்தில் பகிர்ந்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? என சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு.. 2,299 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.! 

மதுபோதையில் ரகளை செய்த ஆசிரியரின் விடியோ (Manapparai Teacher Video) :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement