AFG Vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், நடப்பு சம்பியனை தோற்கடித்து அபார வெற்றியடைந்த ஆப்கானிஸ்தான்..!

இறுதியில் இங்கிலாந்து தோல்வியுற்றது.

AFG Vs ENG (Photo Credit: @ANI Twitter)

அக்டோபர் 16, டெல்லி (Sports News): 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC Cricket World Cup 2023), இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 13 போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில், நேற்று நடந்த 13வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து (Afghanistan Vs England) அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி (Arun Jaitley Stadium) கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டன.

இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்சியையும் கொடுத்தது. ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய பலவீரர்கள் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அணியின் இலக்கு மளமளவென உயர்ந்தது. Mor Kuzhampu Recipe: மனமனக்கும் சுவையான மோர்க்குழம்பு செய்வது எப்படி?.. சமையல் பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க..!

ஆட்டத்தின் இறுதியில் 10 விக்கெட்டுகளையும் இழந்தாலும், 49.5 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய ரஹ்மானுல்லா 57 பந்துகளில் 80 ரன்கள், இப்ராஹிம் 48 பந்துகளில் 28 ரண்களும், சகிதி 36 பந்துகளில் 14 ரன்கள், உமர் சாய் 24 பந்துகளில் 19 ரன்கள், அலிகில் 66 பந்துகளில் 58 ரன்கள், ரஷீத் கான் 22 பந்துகளில் 23 ரன்கள், ரகுமான் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தனர்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 285 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. மறுமுனையில் விளையாடிய இங்கிலாந்து அணியின் பல ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்ததால், அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து சார்பில் விளையாடிய ஹேரி 61 பந்துகளில் 66 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தார். பிற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் நேற்றைய ஆட்டத்தின் முடிவில், 40.3 ஓவர்களில் 215 ரன்கள் மட்டும் அடித்த இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்தது.