அக்டோபர் 16, சென்னை (Cooking Tips): கோடைக்காலமோ, குளிர்காலமோ பகல் வேளைகளில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பலரும் குளிர்ச்சியை உணவுகளை விரும்புவார்கள். சிலர் வீதிகளில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி, மோர், கம்மங்கஞ்சி, இளநீர் உட்பட உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுவார்கள்.
வீட்டில் மதிய வேளைகளில் அதிக வெயில் கொளுத்தும் நாட்களில் தயிர் சாதம், மோர் சாதம் போன்றவை இருந்தால் நன்றாக இருக்கும் என ஏங்கும் நெஞ்சங்கள் பலர். அவர்கள் சுவையாக மோர்குழம்பை செய்து சாப்பிட்டு பழகிவிட்டால், மீண்டும் அதனையே விரும்புவார்கள். இன்று மனமனக்கும் சுவையான மோர்க்குழம்பு (Mor Kuzhambu Preparation) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். IND Vs PAK Online Orders: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டத்தில் சுவாரஷ்யம்; பிரியாணி, காண்டம் ஆர்டர் செய்து களேபரம்.. இதோ லிஸ்ட்..!
செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 1/2 முறி,
பச்சை மிளகாய் - 2,
சீரகம் - 1/2 கரண்டி
இஞ்சி - சிறிதளவு,
துவரம் பருப்பு - 1 கரண்டி
அரிசி - 1/2 கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 கரண்டி,
தயிர் - 1/2 கிண்ணம்,
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 3,
வெந்தயம் - அரை கரண்டி,
கடுகு - தாளிப்பதற்கு
கறிவேப்பில்லை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட துவரம் பருப்பு, அரிசி ஆகியவற்றை அரைமணிநேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஊறவைத்த துவரம் பருப்பு, அரிசி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை மிக்சி சார்ஜில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். Halloween 2023 Vibes: சிலந்தி நாயை பார்த்து தலைதெறித்து ஓடிய தாய்; கலக்கல் வீடியோ வைரல்.!
இதனை கடாயில் ஊற்றி, 1/2 கிண்ணம் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கலவை நன்கு கொதித்ததும் இந்த கலவையில் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
இறுதியாக மற்றொரு வானெலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து மோர்குழம்பின் மீது ஊற்றி இறக்கினால் சுவையான மனமனக்கும் மோர்க்குழம்பு தயார்.
இதனுடன் பூசணிக்காய், வடை போன்றவற்றை சேர்த்தும் மோர்க்குழம்பு செய்து சாப்பிடலாம். இன்னும் சுவையாக இருக்கும்.