IND Vs ENG Semi Final 2 Highlights: 10 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி; இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி..!

நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, 10 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

IND Vs ENG SF 2 Highlights (Photo Credit: @ICC X)

ஜூன் 28, கயானா (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து (IND Vs ENG SF 2) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் குவித்தது. College Student Drowning Swimming Pool: நீச்சல் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..! சக மாணவர்கள் போராட்டம்..!

இந்திய அணி சார்பில் கேப்டன் ரோஹித் சர்மா 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்தியா 68 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்களும், பும்ரா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 10 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆட்டநாயகன் விருதை அக்சர் பட்டேல் பெற்று சென்றார்.