Jai Shree Ram By Glenn Maxwell: தாய்நாட்டுக்கு புறப்படும் முன், ஜெய்ஸ்ரீராம் என ட்விட் பதிவிட்ட ஆஸ்திரேலிய அணியின் வீரர்: இதை யாருமே எதிர்பார்க்கவில்லையே..!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் உலகக்கோப்பையை தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் விளையாடி, டி20 தொடரில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் தங்களின் நாட்டிற்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

நவம்பர் 30, புதுடெல்லி (Sports News): 50 ஓவர்கள் கொண்ட ஐசிசி உலகக்கோப்பை 2023 (ICC CWC 2023 Champions Australia) கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி, 6வது முறையாக உலகக்கோப்பையை தனதாக்கியது. இந்தியா தலைமையேற்று நடத்திய 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS Final 2023) அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டன.
இந்த ஆட்டத்தின் முடிவில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Team India) 240 ரன்கள் குவித்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி (Team Australia), 43 வது ஓவரில் தனது வெற்றியை அடைந்தது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணியினரால் அன்று கொண்டாடப்பட்டது. இந்தியா இறுதிவரை போராடி தனது முதல் தோல்வியை 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அடைந்திருந்தது. POCO M6 Pro 5G Launched in India: பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தவர்களுக்கு உற்சாக செய்தி: விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது POCO M6 Pro 5G..!
வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh), உலகக்கோப்பையில் மீது கால் வைத்தவாறு புகைப்படம் வெளியாகி பெரும் கண்டனத்தை பெற்றது. இதனையடுத்து, ஆஸி., அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் (David Warner) இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம், மார்ஸின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் கிளன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "இது வீட்டிற்கு புறப்படும் நேரம். நன்றி இந்தியா. நினைவில் இருந்து மறக்க முடியாத நாட்கள் இவை. இந்தியாவை காதலிக்கிறேன். ஜெய் ஸ்ரீராம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் சில ஆண்டுகளாகவே ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகம் பல்வேறு வகையான சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. வலதுசாரி ஆதரவாளர்கள் கிரிக்கெட் மைதானங்களில் ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டதும் நடந்தது. இவ்வாறான சூழ்நிலையில் ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் தனது ட்விட் பதிவில் பயன்படுத்தியுள்ளது நடந்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)