IND Vs ENG Test Update: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி: 3 ஆட்டங்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.! விபரம் உள்ளே.!
முதல் போட்டியில் வெற்றியை தவறவிட்ட இந்திய அணி, இரண்டாவதில் வெற்றி அடைந்தது. தற்போது 3 போட்டிகள் எஞ்சி இருக்கின்றன.
பிப்ரவரி 10, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து (IND Vs ENG Test Series) கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணிக்கு எதிராக விளையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நடைபெற்ற முடிந்த இரண்டு ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா ஒரு புள்ளிகள் முன்னிலை பெற்று ஆட்டத்தை சமநிலையில் வைத்துள்ளன. எஞ்சிய அடுத்த மூன்று போட்டிகளில் மூன்றாவது ஆட்டம் வரும் பிப்ரவரி 15 இல் தொடங்கி 19ல் நிறைவு பெறுகிறது. இந்த ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. பிசிசிஐ நிர்வாகம் முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது எஞ்சிய 3 போட்டிகளுக்குமான அணியினரை அறிவித்துள்ளது. Hyderabad Shocker: சாலையில் குழந்தையுடன் நடந்துசென்ற பெண்ணின் செயின் பறிப்பு; பதறவைக்கும் காட்சிகள்.!
இந்திய கிரிக்கெட் அணி (Team India Squad): அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், கேஎல் ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பாரத், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
காத்திருப்பு பட்டியலில் 2 வீரர்கள்: இவர்களில் விராட் கோலி (Virat Kohli) எஞ்சிய மூன்று போட்டிகளிலும் சொந்த காரணங்களுக்காக கலந்து கொண்ட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) மற்றும் கே.எல் ராகுல் (KL Rahul) ஆகியோர் பிசிசிஐ நிர்வாகத்தின் மருத்துவ குழு முடிவுக்காக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். விராட் கோலி சொந்த காரணத்திற்காக முதல் 2 போட்டியிலும் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. தற்போதும் அவரின் முடிவுக்கு பிசிசிஐ (BCCI) நிர்வாகம் மதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.