AFG Vs PNG Highlights: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி; சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி..!

இன்று நடைபெற்ற 29-வது லீக் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி அடைந்தது.

AFG Vs PNG Highlights (Photo Credit: @ICC X)

ஜூன் 14, டிரினிடாட் (Sports News): ஐசிசி டி20 உலகக்கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 29-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-பப்புவா நியூ கினியா (AFG Vs PNG) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. Van - Lorry Collision 7 Died: மீனவர்களை ஏற்றிச்சென்ற வேன் - லாரி மோதி பயங்கர விபத்து; 7 பேர் பரிதாப பலி.. அதிவேகத்தில் நடந்த சோகம்.!

இதனையடுத்து, களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 19.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர், 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.

அடுத்து அதிரடியாக விளையாடி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 101 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த அணி தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆட்டநாயகன் விருதை அபாரமாக பந்துவீசிய பசல்ஹக் பரூக்கி பெற்று சென்றார்.