IPL Auction 2025 Live

Dinesh Karthik Retirement: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்.. சோகத்தில் ரசிகர்கள்..!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் பெங்களூரூ அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

DK (Photo Credit: @CricCrazyJohns X)

மே 23, அகமதாபாத் (Cricket News): ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், நேற்று எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் (RR Vs RCB) அணிகள் மோதிக்கொண்டன. இந்த ஆட்டத்தில் பெங்களூரு வெளியேறிய நிலையில், அந்த அணிக்காக விளையாடி வந்த தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) ஓய்வு பெற்றார்.

ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்: அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை அளித்தார். அப்போது தினேஷ் கார்த்திக் தனது கையுறைகளை கழற்றி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் பாராட்டையும் (IPL Retirement) ஏற்றுக்கொண்டார். Orange Alert For Tamil Nadu & Puducherry: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சாதனைகள்: கடந்த 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் தினேஷ் கார்த்திக். ஆரம்பத்தில் டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.7.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டு 4 ஆண்டுகள் கேகேஆர் அணிக்காக விளையாடி வந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக ரூ.5.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 3 சீசன்களாக விளையாடி வந்தார்.

மொத்தம் 257 போட்டிகளில் ஆடி 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 22 அரை சதங்கள் அடக்கம். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஆடி 326 ரன்களை சேர்த்த அவர், மீண்டும் ஒரு முறை ஆர்சிபி-க்கு ஃபினிஷராக செயல்பட்டார். இதில் 466 பவுண்டரிகள், 161 சிக்ஸர்களுடன் 22 அரைசதங்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் தோனிக்கு (190) பின் அதிக விக்கெட்டுகளை (174) எடுத்த 2வது விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார்.