ஆகஸ்ட் 25, பெங்களூரு (Cinema News): பிரபல கன்னட நடிகர் தினேஷ் மங்களூர் (Dinesh Mangaluru) தனது 55 வயதில் உடல்நலக் குறைவால் இன்று (ஆகஸ்ட் 25) காலமானார். கே.ஜி.எஃப் படத்தில் தங்கக் கடத்தல்காரன் ஷெட்டி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். நீண்டகால உடல்நலக் குறைவால் குந்தபுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நாளை (ஆகஸ்ட் 26) மாலை பெங்களூரூவில் உள்ள லாகரேயில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது. Jana Nayagan: தளபதியின் கடைசி பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் தல அஜித்.. லீக்கான தகவல்.!
பிரபலங்கள் இரங்கல்:
சினிமாவில், ஆரம்ப காலக்கட்டத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, கலை இயக்குநராக மாறி, கிட்டத்தட்ட 200 படங்களில் பணியாற்றினார். 'கேஜிஎஃப்', 'காந்தாரா' மற்றும் 'கிரிக் பார்ட்டி' உள்ளிட்ட படங்களிலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகினார். இவரது மறைவு செய்தி, திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.