IPL Auction 2025 Live

Hardik Pandya New Mumbai Indians Captain: மும்பை அணியின் கேப்டன் ஆன ஹர்டிக் பாண்டியா... கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி..!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வெற்றிகரமான அணியாக செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Hardik Pandya (Photo Credit: @mipaltan X)

டிசம்பர் 15, டெல்லி (Delhi): ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 17வது சீசன் நடைபெற உள்ளது. இது அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கான ஐபிஎல் மினி ஏலம் (IPL 2024 auction) டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. IPL 2024 Auction: ஐபிஎல் ஏலம் 2024 எங்கு நடக்க உள்ளது?. பங்கு பெறவிருக்கும் முழு போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ..!

கேப்டன் ஆன ஹர்டிக் பாண்டியா: மேலும் டிரேட் முறையில் அணிகளின் வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஹர்திக் பாண்டியா 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதில், குஜராத் அணியின் முதல் சீசனில் டைட்டிலும் பெற்றுக் கொடுத்துள்ளார். 2ஆவது சீசன் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. இவர் இந்த அணிக்கு வருவதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் ரோஹித் ஷர்மா கேப்டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.